12/31/2009

தொலைந்தது 2009





2009 பாரிய அளவிலே அழிவுகளை ஏற்படுத்திய வருடம் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு வருடம் என்றால் அது 2009 தான்...பல்வேறு விதங்களில் உயிர் இழப்புகளும் அழிவுகளும் கண்ணனுக்கு முன் அரங்கேறிய காலம்...2009 நமக்கு இழைத்த துன்பங்களே அதிகம் அதனால் தான் தொலைந்த்தது 2009 என்று தலைப்பிட்டேன்..


பல வித்தியாசமான அனுபவங்களை தாங்கி வந்த ஒரு குழப்ப கரமான ஆண்டு என்று  கூட கூறலாம்..எதோ ஒரு வகையில் யுத்தம் முடிவுக்கு வந்தது என்று அறிவித்தாலும் கூட இந்த ஆண்டில் யுத்த தாண்டவம் பாரிய அளவில் அரங்கேறி இருந்த்தது..

2009 எமக்கு விட்டு சென்ற பல கேள்விகளுக்கு விடை இந்த புது வருடத்தில் தான் கிடைக்க போகின்றது அதிலும் முக்கியமான கேள்வியாக  நான் கருதுவது.

சரத் பொன்சேகாவா மகிந்தவா அடுத்த ஜனாதிபதி?
இது தான் கடைசியாக 2009 எமக்கு விட்டு சென்ற முக்கியமான கேள்வி.. 

2009 எமக்கு அதிகளவான காயங்களைத் தந்து விட்டது, 2010 அந்த காயங்களுக்கு சரியான மருத்துவம் செய்யுமா பார்ப்போம்...

எனது வலைப்பதிவு நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..







12/23/2009

அட மூதேவி இது தேவையா..

வேட்டைக்காரனை புறக்கணிப்போம் என்று மூஞ்சி புத்தகத்தில் ஒரு குழு, என்ன கொடுமை.. அந்த குழு தொடங்கினதுக்கு போட்டிருக்காங்க ஒரு காரணம் ஆஹா நம்ம ஆக்கள் எங்கயோ போய்டாங்க...நான் விஜய் ரசிகன் அல்ல ஆனாலும் அந்த காரணத்தை பார்த்த போது கடுப்பின் உச்சத்துக்கு போயிட்டன், அதாவது குண்டு போட்டு அரை இலட்சம் மக்கள் இறப்பிற்கு காரணமாக இருந்த இராணுவத்தை புகழ்ந்து பாடிய இராஜ் வேட்டைக்காரன் பாடல்களுக்கு இசை உதவி செய்திருக்கின்றாராம் ஆகவே தமிழ் இனத்துக்கு விஜய் பெரிய துரோகம் செய்திடேராம்(ரூம் போட்டு ஜோசிபாங்கலோ) இந்த குழுவ தொடங்கின சிங்கம் லண்டன்ல இருக்கு என்பது தான் பெரிய காமெடி...
 தமிழன் எவளவு பெரிய துரோகம் எல்லாம் பாத்திட்டான், தமிழனுக்கு தமிழன் செய்த துரோகத்த விட இது ஒரு துரோகமா...லண்டன்ல இருக்கிற தம்பி உங்கட பொழுது போக்குக்கு தமிழர பிரச்சனைய பாவிச்சது போதும் இந்த அற்ப  விடயங்கள புறக்கணிச்சு என்னத்த காண போறீங்க..லண்டல அகதி அந்தஸ்து பெறுவதுக்கு யுத்தத்த கண்ணால காணாத பலரும் தாங்கள் யுத்தத்தால் பாதிகப்படவர்கள் என்று நாய் கடித்த காயத்தை குண்டடி பட்ட காயம் என்று கூறிய வரலாறுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் முதலில் அவங்களை புறக்கனிங்கோ அதுக்கு பிறகு மற்றவர்களை புறக்கணிக்கலாம்.. புறக்கணிச்ச தம்பி, பாடல்களுக்கு இசை வழங்குவது இராஜ்சின் தொழில் என்பதை நீங்க கவனிக்க வேண்டும்,நடிப்பது விஜயின் தொழில் அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்...விஜய் யார்? அவரிடம் தமிழர் பிரச்சனைக்கு என்னத்தை எதிர் பார்க்க முடியும்..ஈழம் என்று ஒரு நாடு உருவானால் கூட வெளிநாட்டில் இருக்கும் பலர் இங்கு வரப் போவதில்லை இப்படியோ கதைச்சு காலத்தை ஓட்டுங்கோ(இது சகலருக்கும் பொருந்தாது)...

இப்படி பாக்க போனால் அரை இலட்சம் பேரை கொன்ற மஹிந்த அரசுக்கு கீழ் இருக்கும் இலவச வைத்தியசாலை பாடசாலை போன்றவற்றையும் லண்டன் தம்பி புறகணிக்க சொலுவார் போல இருக்கு, லண்டன் தம்பி, புறக்கணிப்பு என்பதை கேவல படுத்தாதீர்கள், முகாமில் இருந்த மக்கள் பசி என்று வந்தவுடன் இராணுவத்திடம் கையேந்தி நின்றார்கள் அதை தவறு என்று கூறுவீர்களா அல்லது புறக்கணிக்க சொல்லுவீரா...எதாவது பிரியோசனமா ஜோசீங்க,மஹிந்த அரசில் இருக்கும் தமிழ் அமைச்சர்களின் காலில் விழுந்து தங்கள் சிறையில் இருக்கும் பிள்ளைகளை விடுவிக்க எத்தனையோ பெற்றோர் தினமும் போகின்றனர் அவர்களை புறக்கணிக்க முடியுமா? பாதிக்க பட்டவர்கள் வலியின் உச்சத்தில் இருக்கிறார்கள் கொஞ்ச காலம் ஆவது அவர்கள் நிம்மதியாக  இருக்கட்டும்.நீங்கள் யாரையும் புறக்கணிக்க வேண்டாம் அப்படி புறக்கணிக்க விரும்பினால் இலங்கைக்கு வந்து புறக்கணியுங்கள்...சொடுக்கி இணைக்க http://www.facebook.com/group.php?gid=197350762271



12/15/2009

விசித்திர வினோத்துக்கு இன்று பிறந்த நாள்..

மகேஸ்வரன் வினோத் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம். இந்த நல்ல நாளில் யார் இந்த வினோத் இவன் பின்னணி என்ன?நான் இவனை முதல் முதலாக 09/10/2006 அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன் சும்மா சொல்ல கூடாது மெல்லிய பெடியன் எண்டாலும் அட்டகாசமான ஸ்டைல், தலைக்கு ஜெல் வைத்து ஒரு விதமாக தான் நின்றான்,நானும் இவனோட கதைப்பம் எண்டு பல முறை try பண்ணியும் முதலாவது நாள் கதைக்க முடியேல..பிறகு உறவு பாலத்தில் தண்ட திறமையால அக்கா மாரின் விருப்பத்துக்குரிய தம்பியா மாறினான். வீனா போனவன் ஓவரு நாளும் சரியாய் காலைல உறவு பாலத்துக்கு வந்திருவான் இப்படி காலங்கள் போக charted ல அத்திவாரம் எண்டு தொடங்கினவன் மள மள எண்டு F1 வரையும் போய் சாதனை படைத்தான் எங்கட Batch  ல முதலாவது வேலைக்கு போனது இவன்தான்...படிப்பில் கொடி கட்டி பறந்த இவன் கடலை போடுவதிலும் குறைந்தவன் அல்ல, சில  சிங்கள பெட்டைகளுக்கு இவன் போட்ட கடலைகள் பிடித்து போய் அனே வினோத், அனே வினோத் எண்டு இவனோட கொஞ்ச காலம் திரிய அதுகளுக்கும் லவ் SET ஆக இவனுக்கு கடலை போட பெரிதா விருப்பம் இல்லாமல் போனது....Hindu union ல சேர்ந்து  பாடுபட்டு உழைத்தது இவனது பெரிய சாதனை, அணைத்து கலை நிகழ்ச்சிகளிலும் இவனது பெரும் பங்கு இருந்து வந்தது..இடையில் ஓரிரு தடவை நடனங்கள் வேறு ஆடி ஒரு மாபெரும் கொடுமை செய்தான். நான் போடும் மொக்கை நாடகங்களுக்கு பக்க பலமாக நின்று உழைப்பான் அதுகளுக்கு Animation  வேற செய்து வருவான்..எங்கட Batch IT king இவன்தான் பல நல்ல குணங்கள் இருந்தாலும் பஸ் ல ஏறினா ஒரு 10 ரூபாய குடுத்து தனக்கு மட்டும் டிக்கெட் எடுப்பான்.5 ரூபாய் ஜெல் பக்கெட் வாங்கி அதை 10 நாள் use பண்ற  technique இவண்ட தான் படிகொனும். பெரிய கொடுமை இவன் 50rs reload  பண்ணி 2மாதம் phone பாவிப்பான், Dialog sim use பண்ணி ஒரு வருசத்தில வெறும் 5 star points எடுத்த ஒரே ஆள் இவன்தான் ,உடுப்பு எடுக்க போனா சும்மாவாவது ஒரு பத்து கடை ஏறி இறங்குவான்...இவனை கஞ்சன் எண்டு ஒதுக்கி விட முடியாது, இன்று நான் இவளவு அழகா Guitar வாசிக்கிறன் அதுக்கு காரணம், வினோத் எனக்கு தந்த Guitar தான். இவனுக்கு பிடிக்காதது தமிழன் வைக்கும் மீசை, பிடித்தது செட்டிநாட்டு தோசை.வெள்ளிகிழமைகளில் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் வெளியில் கழட்டி விட்டு வந்த செருப்பு துலைய கூடாது எண்டு கும்பிடுவான்.பஸ் காசை சேமிக்க கோவில்ல இருந்து வீடு வரை நடந்து போவான்.எப்படியோ யாருக்கும் சொல்லாமல் ரகசியமா பல plan கள் போடுவான்...மொத்தத்தில் வினோத், மகேஸ்வரனால் இந்த உலகத்துக்கு தரப்பட்ட ஒரு அரிய சொத்து. அவனது சாதனைகள் தொடர  வாழ்த்துக்கள்...அழகான பெண்கள் அவனை தொடர்பு கொள்ளலாம், மச்சான் FREE யா தான் இருக்கார்.வினோத் யாருக்கும் தெரியாமல் இந்தியாவில் தனது பிறந்த நாளை  கொண்டாடிக்கொண்டு  இருபதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன...இதுவும் அவர்ட ஒரு சிறப்பம்சம் .



10/09/2009

கொள்ளைக் கோஸ்டி- பாகம் 1

இந்த கொள்ளை கோஸ்டி எண்டதும் ஞாபகம் வருவது அந்த கால MGR படங்கள் தான், ஒரு கொள்ளை கோஸ்டி இருக்கும் அதற்கு தலைவராக நம்பியார் இருப்பார், பல பொத்தான்களை அழுத்தும் கதவுகள் திறக்கப்பட்டு, தலைவர் ஒரு பாதாள அறையில் பல கலர் கலர் லைட்டுகளை போட்டு (வெசாக் கூடுகள் மாதிரி) காண்ட மிருகம் கொட்டாவி விட்டது போல தேவையே இல்லாம பயங்கரமா சிரிச்சு தன்னை வில்லன் என அடையாள படுத்தி கொள்வார்...
இது அந்தக்கால கொள்ளை கோஸ்டி ஸ்டைல், முக்கியமான விஷயம் இந்த கொள்ளை கோஷ்டியினர் ஒளிந்து வாழுவார்கள், ஆனால் இன்று நாம் காணும் கொள்ளையர்கள் எம் கண் முன்னே எவ்வளவு அழகாக வலம் வருகிறார்கள்.

இலங்காபுரியிலேகொள்ளை காரன் வெள்ளைக்காரன் போல் வாழ்கிறான், யார் இந்த கொள்ளைக்காரர்கள்????????????
படிப்படியாக ஒவ்வொரு கொள்ளைக்காரர்களாக பார்ப்போம்
மக்களுக்கு கண்முன்னே தெரியும் கொள்ளைகரர்களும் இருக்கிறார்கள், பல கண்முன்னே தெரியா மறைமுக கொள்ளைகாரர்களும் இருக்கிறார்கள்.முதலிலே கண்முன்னே பளிச்சென்று தெரியும் கொள்ளைக்காரகளில் முதலிடத்தில் இருப்பவர்கள் போக்குவரத்து போலீசார்.
இவர்கள் பகல் கொள்ளை மற்றும் இரவு நேரக்கொள்ளைகளில் கை தேர்ந்தவர்கள், பாரபட்சமின்றி துல்லியமாக செய்வார்கள். சாரதி அனுமதி பத்திரம், வாகனக் காப்புறுதி, வருடாந்த அனுமதி பத்திரம் என்பன இல்லாத போதோ அல்லது  காலாவதியான போதோ கொதித்தெழும் இவர்கள், கடுப்பின் உச்சத்துக்கு போவது போல் ஒரு நாடகத்தை முதலில் அரங்கேற்றுவர் பின்னர் பக்கத்துக்கு மதிலோரமாக அழைத்துச் சென்று கையை பிசைவர் தலையை சொறிவர், பிடிபட்டவன் இதனை விளங்கி கொண்டு ஒரு மயிலை (1000/=) வீசி எறிந்தால் சில அறிவுரைகளுடன் விட்டுவிடுவர்
மேலதிகாரிகளுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக பணக்கஷ்டத்தில், வருட அனுமதியோ காப்புறுதியோ எடுக்காத வாகன சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு உடனடித் தண்டப் பணத்தை இந்த வீணா போன தண்டங்கள் அறவிடும் கொடுரமும் நடைபெறும் ஆனால் சில தலைவர்களின்  மகன்கள் கார் ஓட வீதியைப் பூட்டி வைப்பார்.

இப்படியான நேரடி பகல் கொள்ளைகளில் ஈடுபடும் இவர்கள், இரவு நேரங்களில் இரா பிச்சைக்காரர்கள் போல் சில மரங்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து வீதியில் வாகன போக்குவரத்துக்கு குறைவாக இருப்பதால் தங்கள் பயணத்தை விரைவாக்க வேகமாக பயணிக்கும் சாரதிகளை மடக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதும் வழக்கம்.
இந்த சீருடை அணிந்த கொள்ளக்கரர்கள் தங்கள் கொள்ளைகளை செவ்வனே செய்கின்றார்கள்.
வரும் பதிவுகளில் அடுத்த கொள்ளைக்காரர்கள் வருவார்கள்.



9/28/2009

154 பஸ்சில் இசரா...... விசரா......

வெள்ளவத்தை மார்கெட்டுக்கு முன்னால இருக்கிற பஸ் ஹோல்ட் ல நான் 154 பஸ் எடுக்க காத்து கொண்டு இருந்தன், எங்கட campus கு ரெண்டு நாசமாப்போன பஸ் தான் போகும் அதில ஒன்று 155,இதில ஏறுற என்டா பாய் தலாணி எல்லாம் கொண்டு தான் போக வேணும். lecture தொடங்கிற ஒரு 15 நிமசத்துக்கு முதல்ல பல்லை ஒருக்கா
தேச்சு துப்பிட்டு பஸ்ஸ பிடிக்க ஓடி வருவன். அதே போல தான் ஒரு நாள்.. அந்த சம்பவம் நடந்தது.
அண்டைக்கு கொஞ்சம் வழமைக்கு மாறாக ஒரு ஊரே அந்த bus சுக்கு உள்ள நசுங்கி கொண்டு வந்தது வழமையா எல்லா கபோதிகளையும் உள்ளுக்குள்ள அனுப்பிட்டு, நான் படில நின்று காத்து வாங்கிட்டு வருவன்.இந்த வீனா போன கண்டக்டர் இசரா இசரா எண்டு காத்து கிழிய கத்தினான், நானும் போடா விசரா எண்டு நின்றன்.அவன் விடுற மாதிரி இல்ல, எப்பிடியாவது என்னை அந்த கூட்டத்துகுள்ள அனுப்பி பிரித்து எடுப்பம் எண்டு முடிவு எடுத்திட்டான்.நாய துரத்திற மாதிரி என்னை நடுவுகுள்ள அனுப்பிட்டான். அந்த கட்டைல போறவனுக்கு எல்லா கெட்ட வார்த்தைளையும் திட்டிட்டு, 30 நிமிச பயணத்த எப்படி கடத்தலாம் எண்டு நினச்ச படி அக்கம் பக்கம் பாத்தா, எல்லா figure ம் 20 marks கு குறைவா தான் இருந்துது எனக்கு ஏழரை சனி எண்டது சரிதான்.
சரி ஆபத்துக்கு பாவம் இல்ல, 20 marks figure ல ரெண்டை select பண்ணி எப்படி 40 marks கு improve பண்றது எண்டு ஒரு விஞ்ஞானி range ல சிந்தனை போய்கொண்டு இருக்க.இந்த விஞ்ஞான சிந்தனைக்கு இடைல உச்சக்கட்ட வியர்வைல பூசி வந்த cream எல்லாம் கரைந்து ஊத்துப்பட தொடங்கிட்டு, இந்த gapல ஒரு எரும மாடு என்னை உரசிர மாதிரியே ஒரு பீலிங்கு.... திரும்பினா பண்ணிகுட்டிகு பௌடர் அடிச்ச மாதிரி ஒருவன் பாத்தா கிட்னி திருடுறவன் மாதிரியே இருந்தான்.இது என்னடா புது வம்பா போச்சு எண்டு நினச்சிட்டு "ஆஹா அவனா நீ" என்ட வடிவேல் ட dialog க சொல்லிட்டு ஒரு step முன்னால move பண்ணினன்.அந்த டைம் பம்பலபிட்டி junction ல ஒரு கொடுமை..... இந்த ஊர் திருவிழா நேரம் பொங்கல் வாங்க அடிபடுற கூட்டம் மாதிரி ஒரு கூட்டம், எப்படியோ இடமே இல்லாத bus ல ஏறிட்டு என்ட கால எவனோ ஒரு மாடு ஏறி மிதிக்க, எவளவு நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....என்னை சுத்தி வர தலையும் கையும் தான் தெரிது ஒரு குத்து மதிப்பா நான் நிக்கிறன். அதுக்குள்ள இந்த கண்டக்டர் விசரன் ஜன்னல்ல தொங்கி வந்து campus மல்லி தவ இசற யண்ட எண்டான்...கடுப்பு உச்சத்துக்கு ஏறிட்டு,கால கஷ்டம் என்னை சுத்தி ஒரு குளிக்காத group நிக்கிற மாதிரியே ஒரு கம கம எண்ட நாற்றம் சரி கொஞ்ச நேரம் தானே எண்டு நானும் பொறுமையா இருந்தன்.
பஸ் ல நின்ற படி என்னால ரோட்ட பாக்கவே முடியேல பஸ் கொஞ்சம் வேகமா போகுது எப்படியும் campus பயிண்ட எண்டு சொல்லுவான் தானே எண்டு காத்து கொண்டு இருந்தன், திடீர் எண்டு town hall பயிண்ட எண்டு அவன் சொல்ல, நானும் இங்க பார் இந்த வெங்காயம் campus ச town hall எண்டு சொல்லுது எண்டு நினச்ச படி துரித கதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் செய்து அந்த பாதுகாப்பு அரண்களை துளைத்துக்கொண்டு வெளிய வந்து சேர்ந்தன்.யாரோ campus இருந்த இடத்தில town hall ல வச்சிருகாங்க எண்டு மனம் ஜோசிக்க. கண்டக்டர் என்னை பார்த்து நீ campus எண்டு ticket எடுத்திட்டு town hall ல இறங்கிரியா? எண்டு என்னை பல figure கு முன்னால திட்டி விட்டு மேலும் நான்குரூபாவை பறித்து சென்றான். எண்ட shirt button ஒன்றையும் காணேல பிதா மகன் விக்கரம் மாதிரி ஆகீடன் ஒரு பத்து பேர் சேர்ந்து பந்தாடினமாதிரி ஒரு நினைப்பு.
இவளவு இழப்புக்கு பிறகும் 100rs குடுத்து auto ல campus போய் சேர்ந்தன்...

இறுதிப் புகலிடம்

கழுகுகள் வான் பரப்பில் வட்டமிட
சிதறிய தந்தையின் தசைகளை
சிறுக சேர்த்தபடி அந்த அப்பாவிச் சிறுவன்
செய்வதறியாது திகைத்து நிற்றல் ஆனான்

உடைந்த வீட்டில் தாயை தேடி
உரக கத்திய அவன்-அன்னையின்
கத்தி கண்டு அரை ஜீவன் தொலைத்தான்
ஒரு மகன் காணா கோலம் கானல் ஆனான்

தந்தையும் தாயும் கடலில் கரைய
கலங்கி நின்ற அவன், மூன்று நாளாய்
காணா அவன் அண்ணனை தேடி
அகிலம் முழுதும் அலையல் ஆனான்

உயிர் துறக்க தயாரான அவன்
உரிமைக்காய் உயிரை அர்ப்பணம் செய்து
தன் சாவை சரித்திரம் ஆக்க எண்ணி
புகலிடம் தேடி புரபடல் ஆனான்.

காதல் பிறந்த கதை

சூரியன் கடலுடன் காதல் கொள்ளும் அந்தி சாயும் பொழுதில், அந்த வழியில் பிரம்மன் வடித்த கால் முளைத்த கவிதையை கண்டு பிரம்மித்த விழிகளுடன் கோபுரங்கள் இல்லாமல் காதல் அலை வரிசை அவள் கண்களில் ததும்பி அவன் இதயத்தில் இடியென இறங்கிய அந்த கணம், அவன் விழிகளில் காதல் கருததரித்தது. சேர்ந்திருந்த உதடுகள் சேராமல் அவளிடம் ஆசை வார்த்தைகள் கூற ஆயத்தமானது, மங்கையின் விசித்திர பார்வை அவன் கண்களில் விழுந்து மூளை அணுக்களை துளைத்த நிலையில், சுற்றிய  நினைவுகள் பற்றிய உறவுகள் நினைவிழந்த நிலையில். அவளின் உதடுகள் பிரிந்து புதிதாய் பூத்த புது மலராய் சிந்திய புன்னகையில் சிதறிய நினைவுகளுடன் ஒரு அடி உயரத்தில் பறந்த அவன் சிட்டுக்குருவிகளும் பட்டாம் பூச்சிகளும் அவன் பாலைவன வாழ்வின் வசந்த வருகைகள் ஆக..ஆயிரம் பேர் நடமாடும் இடத்தில் அவள் தவிர ஏதும் தெரியா நிலையில் தன் நினைவுகளை தொலைத்த அவன்.அவனையே தேடி அவளின் பின்னால் தன் இதயம் சென்ற அந்த கணம் தன் காதல் பிறந்ததை உணர்ந்தான்.

தாலாட்டு கேட்காத தொட்டில்கள்


வயலொர வன்ப்பிலே அன்று
அவருக்கு அன்னமிட்ட கையுடன்
குழந்தை அழுகுரலில் ஒடி வந்து
என்னை தழுவிய அந்த தாயின்
சாம்பலும் கடலொடு கலந்து விட்டது
இன்று வயலும் இல்லை வனப்பும் இல்லை
இந்த ஆல மரத்திலே தொங்கும் நாங்கள்
தலாட்டு கேட்க்காதா தொட்டில்கள்


கலங்கரை தேடி....

நினைவுகள் சுமையுடன் ஆழ்கடல் நடுவே  
ஆர்பரிக்கும் என் மனக்கப்பல் 
காதலின் கலங்கரை தேடி
தொலைந்த பாதையில் இக்கணம்
நடு வானில் நட்சத்திரம் இல்லா
நடு நிசியில் சுழல் காற்றும்
சூறையாட காத்திருக்கும் 
கார் இருள் நொடியிலும் 
என்னை காதல் அலை காவு கொள்ள
காத்திருக்கும் கணப் பொழுதில்  
காதலும் நானும் ஒரே நாளில்  
இறுதி கிரியை செல்லும் இமைப் பொழுதில் 
இமை மூடி என்னவள் முகம் காணும்
இன்பத்திற்கு நிகரென உலகில் ஏதும் உண்டோ.





அட்டகாச ஆரம்பமும்கோ...

இது ஒரு புதிய அத்தியாயம் புரட்சியின் தொடக்கம் என்று சொல்ல ஆசை தான் ஏன்டா வீண் வம்பு என்று தொலைவில் ஒரு குரல் யாருடையது என்று தெரியவில்லை. சரி எது என்னவானாலும் கொஞ்சம் கலக்கலும் கொஞ்சம் அலசலும் என்று எனது பதிவை கொண்டு நகர்த்தலாம் என்ற எண்ணத்துடன் தொடங்குகிறேன் இதன் முடிவிடம் தெரியவில்லை பார்ப்போம். என்னகு முன் இமயமாக தெரியும் எத்தனையோ பதிவர்களுக்கு முன்னால் நானும் ஒரு சிறு குன்றாய் இணைகிறேன். கருத்துக்களின் சாட்டை அடி என்னக்கு காத்திருந்தாலும் (நாங்க வாங்காத அடியா) தூக்கு மேடை பஞ்சு மெத்தை எண்டு ஒரு பன்ச் சொல்லிடு போய்டே இருப்பம். மேதாவிகளின் மேலான ஒத்துழைப்புகளுக்கு காத்திருக்கிறேன்.

சினிமாக்களில் வரும் ஆரம்ப பாடல் போல் இது ஒரு தேவை இல்லாத build up ஆக இருக்கலாம் இருந்தும் மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக இப்படி ஒரு setup  எனது பணி தொடரும் அடுத்தவருக்கு அது பிணியாகமல் இருக்கும் வரை சந்தோசம்.

பின்னூட்டல்