9/28/2009

154 பஸ்சில் இசரா...... விசரா......

வெள்ளவத்தை மார்கெட்டுக்கு முன்னால இருக்கிற பஸ் ஹோல்ட் ல நான் 154 பஸ் எடுக்க காத்து கொண்டு இருந்தன், எங்கட campus கு ரெண்டு நாசமாப்போன பஸ் தான் போகும் அதில ஒன்று 155,இதில ஏறுற என்டா பாய் தலாணி எல்லாம் கொண்டு தான் போக வேணும். lecture தொடங்கிற ஒரு 15 நிமசத்துக்கு முதல்ல பல்லை ஒருக்கா
தேச்சு துப்பிட்டு பஸ்ஸ பிடிக்க ஓடி வருவன். அதே போல தான் ஒரு நாள்.. அந்த சம்பவம் நடந்தது.
அண்டைக்கு கொஞ்சம் வழமைக்கு மாறாக ஒரு ஊரே அந்த bus சுக்கு உள்ள நசுங்கி கொண்டு வந்தது வழமையா எல்லா கபோதிகளையும் உள்ளுக்குள்ள அனுப்பிட்டு, நான் படில நின்று காத்து வாங்கிட்டு வருவன்.இந்த வீனா போன கண்டக்டர் இசரா இசரா எண்டு காத்து கிழிய கத்தினான், நானும் போடா விசரா எண்டு நின்றன்.அவன் விடுற மாதிரி இல்ல, எப்பிடியாவது என்னை அந்த கூட்டத்துகுள்ள அனுப்பி பிரித்து எடுப்பம் எண்டு முடிவு எடுத்திட்டான்.நாய துரத்திற மாதிரி என்னை நடுவுகுள்ள அனுப்பிட்டான். அந்த கட்டைல போறவனுக்கு எல்லா கெட்ட வார்த்தைளையும் திட்டிட்டு, 30 நிமிச பயணத்த எப்படி கடத்தலாம் எண்டு நினச்ச படி அக்கம் பக்கம் பாத்தா, எல்லா figure ம் 20 marks கு குறைவா தான் இருந்துது எனக்கு ஏழரை சனி எண்டது சரிதான்.
சரி ஆபத்துக்கு பாவம் இல்ல, 20 marks figure ல ரெண்டை select பண்ணி எப்படி 40 marks கு improve பண்றது எண்டு ஒரு விஞ்ஞானி range ல சிந்தனை போய்கொண்டு இருக்க.இந்த விஞ்ஞான சிந்தனைக்கு இடைல உச்சக்கட்ட வியர்வைல பூசி வந்த cream எல்லாம் கரைந்து ஊத்துப்பட தொடங்கிட்டு, இந்த gapல ஒரு எரும மாடு என்னை உரசிர மாதிரியே ஒரு பீலிங்கு.... திரும்பினா பண்ணிகுட்டிகு பௌடர் அடிச்ச மாதிரி ஒருவன் பாத்தா கிட்னி திருடுறவன் மாதிரியே இருந்தான்.இது என்னடா புது வம்பா போச்சு எண்டு நினச்சிட்டு "ஆஹா அவனா நீ" என்ட வடிவேல் ட dialog க சொல்லிட்டு ஒரு step முன்னால move பண்ணினன்.அந்த டைம் பம்பலபிட்டி junction ல ஒரு கொடுமை..... இந்த ஊர் திருவிழா நேரம் பொங்கல் வாங்க அடிபடுற கூட்டம் மாதிரி ஒரு கூட்டம், எப்படியோ இடமே இல்லாத bus ல ஏறிட்டு என்ட கால எவனோ ஒரு மாடு ஏறி மிதிக்க, எவளவு நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....என்னை சுத்தி வர தலையும் கையும் தான் தெரிது ஒரு குத்து மதிப்பா நான் நிக்கிறன். அதுக்குள்ள இந்த கண்டக்டர் விசரன் ஜன்னல்ல தொங்கி வந்து campus மல்லி தவ இசற யண்ட எண்டான்...கடுப்பு உச்சத்துக்கு ஏறிட்டு,கால கஷ்டம் என்னை சுத்தி ஒரு குளிக்காத group நிக்கிற மாதிரியே ஒரு கம கம எண்ட நாற்றம் சரி கொஞ்ச நேரம் தானே எண்டு நானும் பொறுமையா இருந்தன்.
பஸ் ல நின்ற படி என்னால ரோட்ட பாக்கவே முடியேல பஸ் கொஞ்சம் வேகமா போகுது எப்படியும் campus பயிண்ட எண்டு சொல்லுவான் தானே எண்டு காத்து கொண்டு இருந்தன், திடீர் எண்டு town hall பயிண்ட எண்டு அவன் சொல்ல, நானும் இங்க பார் இந்த வெங்காயம் campus ச town hall எண்டு சொல்லுது எண்டு நினச்ச படி துரித கதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் செய்து அந்த பாதுகாப்பு அரண்களை துளைத்துக்கொண்டு வெளிய வந்து சேர்ந்தன்.யாரோ campus இருந்த இடத்தில town hall ல வச்சிருகாங்க எண்டு மனம் ஜோசிக்க. கண்டக்டர் என்னை பார்த்து நீ campus எண்டு ticket எடுத்திட்டு town hall ல இறங்கிரியா? எண்டு என்னை பல figure கு முன்னால திட்டி விட்டு மேலும் நான்குரூபாவை பறித்து சென்றான். எண்ட shirt button ஒன்றையும் காணேல பிதா மகன் விக்கரம் மாதிரி ஆகீடன் ஒரு பத்து பேர் சேர்ந்து பந்தாடினமாதிரி ஒரு நினைப்பு.
இவளவு இழப்புக்கு பிறகும் 100rs குடுத்து auto ல campus போய் சேர்ந்தன்...

இறுதிப் புகலிடம்

கழுகுகள் வான் பரப்பில் வட்டமிட
சிதறிய தந்தையின் தசைகளை
சிறுக சேர்த்தபடி அந்த அப்பாவிச் சிறுவன்
செய்வதறியாது திகைத்து நிற்றல் ஆனான்

உடைந்த வீட்டில் தாயை தேடி
உரக கத்திய அவன்-அன்னையின்
கத்தி கண்டு அரை ஜீவன் தொலைத்தான்
ஒரு மகன் காணா கோலம் கானல் ஆனான்

தந்தையும் தாயும் கடலில் கரைய
கலங்கி நின்ற அவன், மூன்று நாளாய்
காணா அவன் அண்ணனை தேடி
அகிலம் முழுதும் அலையல் ஆனான்

உயிர் துறக்க தயாரான அவன்
உரிமைக்காய் உயிரை அர்ப்பணம் செய்து
தன் சாவை சரித்திரம் ஆக்க எண்ணி
புகலிடம் தேடி புரபடல் ஆனான்.

காதல் பிறந்த கதை

சூரியன் கடலுடன் காதல் கொள்ளும் அந்தி சாயும் பொழுதில், அந்த வழியில் பிரம்மன் வடித்த கால் முளைத்த கவிதையை கண்டு பிரம்மித்த விழிகளுடன் கோபுரங்கள் இல்லாமல் காதல் அலை வரிசை அவள் கண்களில் ததும்பி அவன் இதயத்தில் இடியென இறங்கிய அந்த கணம், அவன் விழிகளில் காதல் கருததரித்தது. சேர்ந்திருந்த உதடுகள் சேராமல் அவளிடம் ஆசை வார்த்தைகள் கூற ஆயத்தமானது, மங்கையின் விசித்திர பார்வை அவன் கண்களில் விழுந்து மூளை அணுக்களை துளைத்த நிலையில், சுற்றிய  நினைவுகள் பற்றிய உறவுகள் நினைவிழந்த நிலையில். அவளின் உதடுகள் பிரிந்து புதிதாய் பூத்த புது மலராய் சிந்திய புன்னகையில் சிதறிய நினைவுகளுடன் ஒரு அடி உயரத்தில் பறந்த அவன் சிட்டுக்குருவிகளும் பட்டாம் பூச்சிகளும் அவன் பாலைவன வாழ்வின் வசந்த வருகைகள் ஆக..ஆயிரம் பேர் நடமாடும் இடத்தில் அவள் தவிர ஏதும் தெரியா நிலையில் தன் நினைவுகளை தொலைத்த அவன்.அவனையே தேடி அவளின் பின்னால் தன் இதயம் சென்ற அந்த கணம் தன் காதல் பிறந்ததை உணர்ந்தான்.

தாலாட்டு கேட்காத தொட்டில்கள்


வயலொர வன்ப்பிலே அன்று
அவருக்கு அன்னமிட்ட கையுடன்
குழந்தை அழுகுரலில் ஒடி வந்து
என்னை தழுவிய அந்த தாயின்
சாம்பலும் கடலொடு கலந்து விட்டது
இன்று வயலும் இல்லை வனப்பும் இல்லை
இந்த ஆல மரத்திலே தொங்கும் நாங்கள்
தலாட்டு கேட்க்காதா தொட்டில்கள்


கலங்கரை தேடி....

நினைவுகள் சுமையுடன் ஆழ்கடல் நடுவே  
ஆர்பரிக்கும் என் மனக்கப்பல் 
காதலின் கலங்கரை தேடி
தொலைந்த பாதையில் இக்கணம்
நடு வானில் நட்சத்திரம் இல்லா
நடு நிசியில் சுழல் காற்றும்
சூறையாட காத்திருக்கும் 
கார் இருள் நொடியிலும் 
என்னை காதல் அலை காவு கொள்ள
காத்திருக்கும் கணப் பொழுதில்  
காதலும் நானும் ஒரே நாளில்  
இறுதி கிரியை செல்லும் இமைப் பொழுதில் 
இமை மூடி என்னவள் முகம் காணும்
இன்பத்திற்கு நிகரென உலகில் ஏதும் உண்டோ.





அட்டகாச ஆரம்பமும்கோ...

இது ஒரு புதிய அத்தியாயம் புரட்சியின் தொடக்கம் என்று சொல்ல ஆசை தான் ஏன்டா வீண் வம்பு என்று தொலைவில் ஒரு குரல் யாருடையது என்று தெரியவில்லை. சரி எது என்னவானாலும் கொஞ்சம் கலக்கலும் கொஞ்சம் அலசலும் என்று எனது பதிவை கொண்டு நகர்த்தலாம் என்ற எண்ணத்துடன் தொடங்குகிறேன் இதன் முடிவிடம் தெரியவில்லை பார்ப்போம். என்னகு முன் இமயமாக தெரியும் எத்தனையோ பதிவர்களுக்கு முன்னால் நானும் ஒரு சிறு குன்றாய் இணைகிறேன். கருத்துக்களின் சாட்டை அடி என்னக்கு காத்திருந்தாலும் (நாங்க வாங்காத அடியா) தூக்கு மேடை பஞ்சு மெத்தை எண்டு ஒரு பன்ச் சொல்லிடு போய்டே இருப்பம். மேதாவிகளின் மேலான ஒத்துழைப்புகளுக்கு காத்திருக்கிறேன்.

சினிமாக்களில் வரும் ஆரம்ப பாடல் போல் இது ஒரு தேவை இல்லாத build up ஆக இருக்கலாம் இருந்தும் மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக இப்படி ஒரு setup  எனது பணி தொடரும் அடுத்தவருக்கு அது பிணியாகமல் இருக்கும் வரை சந்தோசம்.

பின்னூட்டல்