10/09/2009

கொள்ளைக் கோஸ்டி- பாகம் 1

இந்த கொள்ளை கோஸ்டி எண்டதும் ஞாபகம் வருவது அந்த கால MGR படங்கள் தான், ஒரு கொள்ளை கோஸ்டி இருக்கும் அதற்கு தலைவராக நம்பியார் இருப்பார், பல பொத்தான்களை அழுத்தும் கதவுகள் திறக்கப்பட்டு, தலைவர் ஒரு பாதாள அறையில் பல கலர் கலர் லைட்டுகளை போட்டு (வெசாக் கூடுகள் மாதிரி) காண்ட மிருகம் கொட்டாவி விட்டது போல தேவையே இல்லாம பயங்கரமா சிரிச்சு தன்னை வில்லன் என அடையாள படுத்தி கொள்வார்...
இது அந்தக்கால கொள்ளை கோஸ்டி ஸ்டைல், முக்கியமான விஷயம் இந்த கொள்ளை கோஷ்டியினர் ஒளிந்து வாழுவார்கள், ஆனால் இன்று நாம் காணும் கொள்ளையர்கள் எம் கண் முன்னே எவ்வளவு அழகாக வலம் வருகிறார்கள்.

இலங்காபுரியிலேகொள்ளை காரன் வெள்ளைக்காரன் போல் வாழ்கிறான், யார் இந்த கொள்ளைக்காரர்கள்????????????
படிப்படியாக ஒவ்வொரு கொள்ளைக்காரர்களாக பார்ப்போம்
மக்களுக்கு கண்முன்னே தெரியும் கொள்ளைகரர்களும் இருக்கிறார்கள், பல கண்முன்னே தெரியா மறைமுக கொள்ளைகாரர்களும் இருக்கிறார்கள்.முதலிலே கண்முன்னே பளிச்சென்று தெரியும் கொள்ளைக்காரகளில் முதலிடத்தில் இருப்பவர்கள் போக்குவரத்து போலீசார்.
இவர்கள் பகல் கொள்ளை மற்றும் இரவு நேரக்கொள்ளைகளில் கை தேர்ந்தவர்கள், பாரபட்சமின்றி துல்லியமாக செய்வார்கள். சாரதி அனுமதி பத்திரம், வாகனக் காப்புறுதி, வருடாந்த அனுமதி பத்திரம் என்பன இல்லாத போதோ அல்லது  காலாவதியான போதோ கொதித்தெழும் இவர்கள், கடுப்பின் உச்சத்துக்கு போவது போல் ஒரு நாடகத்தை முதலில் அரங்கேற்றுவர் பின்னர் பக்கத்துக்கு மதிலோரமாக அழைத்துச் சென்று கையை பிசைவர் தலையை சொறிவர், பிடிபட்டவன் இதனை விளங்கி கொண்டு ஒரு மயிலை (1000/=) வீசி எறிந்தால் சில அறிவுரைகளுடன் விட்டுவிடுவர்
மேலதிகாரிகளுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக பணக்கஷ்டத்தில், வருட அனுமதியோ காப்புறுதியோ எடுக்காத வாகன சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு உடனடித் தண்டப் பணத்தை இந்த வீணா போன தண்டங்கள் அறவிடும் கொடுரமும் நடைபெறும் ஆனால் சில தலைவர்களின்  மகன்கள் கார் ஓட வீதியைப் பூட்டி வைப்பார்.

இப்படியான நேரடி பகல் கொள்ளைகளில் ஈடுபடும் இவர்கள், இரவு நேரங்களில் இரா பிச்சைக்காரர்கள் போல் சில மரங்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து வீதியில் வாகன போக்குவரத்துக்கு குறைவாக இருப்பதால் தங்கள் பயணத்தை விரைவாக்க வேகமாக பயணிக்கும் சாரதிகளை மடக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதும் வழக்கம்.
இந்த சீருடை அணிந்த கொள்ளக்கரர்கள் தங்கள் கொள்ளைகளை செவ்வனே செய்கின்றார்கள்.
வரும் பதிவுகளில் அடுத்த கொள்ளைக்காரர்கள் வருவார்கள்.



பின்னூட்டல்