1/12/2010

கோபிக்கு இன்று கொண்டாட்டம்!!!!!

யார் இந்த கோபிதாஸ்?1986/1987 காலப் பகுதியில் யாழ்ப்பாண மக்கள், ஒரு சிறந்த அறிவுரையாளன் அரசியல் வாதி இல்லை என மனம் வேதனை பட்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்,கடவுள் மனம் இரங்கி,13/01/1987 அன்று யோகேஸ்வரன் தம்பதியினருக்கு ஒரு அதிசய குழந்தை பிறக்கும் என கூறி மறைந்தார், அந்த நாளும் வந்தது மக்கள் அனைவரும் அந்த அதிசய குழந்தையை காண திரண்டு இருந்தனர்,பலத்த இடி மின்னல் அடிக்க  குழந்தையும் பிறந்தது, மக்கள் அதிசய குழந்தையை ஆவலாக பார்க்க, என்ன அதிசயம் பிறந்த குழந்தை மிக சரளமாக பேசியது, திடீர் என்று இந்தியாவை குழந்தை கெட்ட வார்த்தையில் திட்ட தொடங்கியது அனைவரும் காதை பொத்தி கொண்டனர் குழந்தை விடுவதாக இல்லை பல அரசியல் தலைவர்களையும் சரமாரியாக திட்டி தீர்த்து இந்த திட்டலை கேட்டு தங்க முடியாமல் பலர் நாலா  பக்கமும் சிதறி ஓடினர்.கோவம் வந்தால் தாக்கும் குணமுடை இந்த குழந்தைக்கு பெற்றோர் கோபிதாஸ் என திரு நாமம் இட்டனர். இந்த குழந்தை படிப்படியாக வளர மக்கள் அனைவரும் சேர்ந்து கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். 


கடந்த மூன்று வருட ஆராய்சியின் முடிவில் இவனை பற்றி  திடுக்கிடும் பல உண்மைகள் வெளி வந்தன, கம்பஸ் வந்த முதல் நாள் தமிழ் பெடியங்கள் யாரையாவது தேடி பிடிப்பம் என நான் அலைந்து கொண்டிருந்த சமயம் ஒரு மீசை வைத்த சிங்கம் CIMA  பற்றி உறுமிக்கொண்டு இருந்தது அவன் வேறு யாரும் அல்ல கோபி தான்..அவனை பார்த்துக் கொண்டு இருந்த நான் திடீர் என்று ஒருவனால் தாக்கப் பட்டேன், அவன் வேறு யாருமல்ல மட்டக்குளி தாதா அசோக், ஓங்கி எனது தோளில் அடித்த படி, "என்ன கதை" என்று கேட்டான் நான் செத்த கதை என்று கூறி கொண்டு தோளில் ஏற்பட்ட வலியால் கடுபானேன்,தான் மட்டக்குளியில் ஒரு பெரியா தாதா என தன்னை அறிமுக படுதிகொண்ட அசோக்கை பார்த்து நான் பீதி அடைந்து கோபியிடம் போய் இதை கூற அவன் சிரித்த படி நானும் ஒரு பயங்கரமான தாதா என கூறினான் பல தாதாகள் இருக்கும் Batch ல நானும் ஒருவன் எண்டு கவலை பட கோபி என்னை தனியே அழைத்து தனது வாழ்க்கை வரலாரை கூறினான். படிக்கும் காலத்தில் தான் படிக்காமல் ஒரு தாதா வாழ்க்கை வாழ்த்தையும் பிறகு ஒரு சின்ன பெடியனுக்கு அடிக்கும் போது அவன் கடுப்பாகி  " இவளவு அடிகிறியே உன்னால படிக்க முடியுமா"என கேட்க தாதா பதவியை துறந்ததாகவும் கூறினான் அதன் பின் முழுமையாக படித்து படிப்பில் தான் செய்த சாதனைகளை கூறினான் ஒருவனின் கண்ணை பார்த்து அவனை பற்றி கூறும் வல்லமை தனக்கு இருபதாகவும் கூறிச் சென்றான், எனக்கு ஒரு பாட்ஷா படம் பார்த்தது போல் இருந்தது மயக்க நிலையில் இருந்த என்னை கலா தண்ணீர் தெளித்து கூட்டிச் சென்றான். 

பிற்காலத்தில் சிறந்த நண்பனான கோபி பல வழிகளில் எனக்கு உதவியாக இருந்தான் அத்துடன் படிப்பில் எட்ட முடியாத சாதனைகளை படைத்தான், ரகர் விளையாடி பல தங்க கொப்பைகை வென்றான் இப்பொது பெட்மிடன் வேறு விளயாடுகிறான், அஜந்தன் அண்ணாவின் கைக்கு வைத்தியம் செய்தது இவனின் பெரிய சாதனை, சிறந்த ஒரு தமிழ் பற்றாளன், கம்பஸ் தமிழ் சங்க தலைவர் இப்படி கூறிக் கொண்டே போகலாம், கோபிக்கு ஒபாமா வுடன் நேரடித் தொடர்பும் உண்டு Barack Obama Fan என்ற Facebook Group ல இவன் ஒரு மெம்பராக இருப்பதே இதற்கு சான்று,,இப்படியான சாதனைகளை தொடர்ந்து செய்ய எங்களுடைய வாழ்த்துகளை இந்த நல்ல நாளில் தெரிவிப்பதில் பேரானந்தம் அடைகிறோம்..கோபிதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பின்னூட்டல்