1/03/2010

அன்பின் ஆவாகனம்!!!

இந்த பதிவு 30/12/2009 இரவு எங்கட பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றுகூடல் பற்றிய விசயங்களைத் தாங்கி வருகின்றது.....7.20pm போல் மண்டபத்தை அடைந்த நான் பல பழைய முகங்களை பார்க்க கூடியதாக இருந்தது ..அதே தொப்பைகளுடன் தவா அண்ணா பஜார் ஒரு புறத்திலும் மறு புறத்தில்,passout ஆகி கொஞ்ச காலத்திலே Aunty மார் போல் ஆகிவிட்ட கவிதா அக்கா மற்றும் பபிதா அக்கா கூட்டணி...
மைக்கை பிடித்து பயங்கரமாக மொக்கை போட்டு கொண்டு இருந்த கிஷாந் ஒருமாதிரியாக பாடல் பாடுவதற்கு இருவரை அழைத்தான்.
சும்மா சொல்ல கூடாது ஒரு கலக்கு கலக்கிட்டான் நம்ம கிட்டார் தம்பி, சும்மா இருந்த பாலாஜி பாடலுக்கு நடுவில் பலூன் விற்பவன் போல் தலையில் ஏதோ கட்டி கொண்டு ஒரு வித்தியாசமான வியாதி வந்தவன் போல் ஓடித் திரிந்தது மொக்கையின் உச்சம்.
இதுக்கு பிறகு கலாச்சார பேப்பர்  நடனப் போட்டி இடம் பெற இருந்தது, இந்த பேப்பர் டான்ஸ் போட்டிக்கு நடுவர்களாக, ஏற்கனவே பல பேப்பர் டான்ஸ் போட்டிகளில் கலந்து கொண்டு பல தங்க கோப்பைகளை வென்ற ராகுலன் அண்ணாவும், விவியன் ட்ரெடெர்ஸ் நிறுவனத்தில் பேப்பர் மடிப்பதில் அதிக அனுபவத்தை கொண்ட பபிதா அக்காவும், exam க்கு பிட் பேப்பர் தயாரிப்பதில் கைதேர்ந்தவருமான சதீஸ்சும் நடுவர்களாக அழைக்கப் பட்டனர்..

போட்டியாளர்களாக பலர் அழைக்கப் பட்டாலும் சுதா அண்ணா, அலெக்ஸ் அண்ணா கூட்டணி, டிரோசன், ராகேஷ் அண்ணா கூட்டணி, மனோச், பிரபு அண்ணா ஆகியோர் முக்கியம் பெற்றனர்.போட்டியை ஆரம்பிப்பதற்கு முன் நடுவர்களை தனியே சந்தித்த சுதா அண்ணா ஒரு கோரிக்கையை முன் வைத்தார் அதாவது தான் நின்று ஆடப்ப் போகும் பேப்பரில் மகிந்தவின் படம் இருக்க வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை..இந்த கோரிக்கையால் குழப்பம் அடைந்த ராகுலன் அண்ணா, பேப்பர் பொடியன் தவா அண்ணாவிடம் சென்று ஆலோசனை கேட்க, தவா அண்ணா, மகிந்தவின் படம் இல்லாமல் இல்லாமல் எந்த பேப்பரும் இருக்காது அதனால் நீர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு போட்டியை தொடங்கும் என ராகுலன் அண்ணாவிடம் தெரிவித்தார்...
DJ சங்கு ஊத போட்டி ஆரம்பமானது, ராகுலன் அண்ணா தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்,பேப்பர் சிறிது சிறிதாக மடிபட டிரோவும் ராகேஷ் அண்ணாவும் நேற்று ராத்திரி எம்மா என்ற பாடலை நினைவு படுத்தும் விதமாக ஆட தொடங்கினர்..
கடந்த சில காலமாக gym போய் உடம்பை கல்லு போல் ஆக்கி வைத்திருக்கும் சுதா அண்ணா, அலெக்ஸ் அண்ணா வை ஓவரு விதமாக தூக்கி பார்வையாளர்களை பரவசப் படுத்தினார். இதன் காரணமாக எழுந்த புகையால் சுதா அண்ணா அதிக களைப்புகுளாகினார், ஆனாலும் அலெக்ஸ் அண்ணா இறங்குவதாக இல்ல, இறுதியில் சுதா அண்ணா போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.
இறுதிவரை போராடி போட்டியில் மனோச் பிரபு அண்ணா கூட்டணி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து அடுத்த fungame மாகா beat ஏற்றது போல் step மாத்தி நடனமாடும் போட்டி இடம் பெற்றது இதற்கு நடுவராக பல நடனங்களுக்கு ஒரே step ஆடிய கவிதா அக்கா அழைக்கப் பட்டார்,
ராஜ்கிரண் போல் எலும்பு கடிக்க கூடிய தவா அண்ணா தனக்கு எலும்பு கடிக்கும் போட்டி வைத்தால் தான் இந்த போட்டியில் பங்கு பெறுவேன் என அடம்பிடித்தார் அவரது வேண்டுகோள் ஏற்கப் பட்டு பிறகு எலும்பு கடிக்கு போட்டி அவருக்கு தனியே நடத்தப்பட்டது. இரு போட்டியிலும் அவரே வெற்றி பெற்றார்...
இதன் பின் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்த உணவு, மட்டக்குளியில் தனது தாதா தொழிலுக்கு பயன் படுத்தும் vanல் அசோக்கால் தனது அடியாட்களின் உதவியுடன் உணவு கொண்டு வரப்பட்டது, கோழி இறைச்சியை பாதுகாக்கும் பொறுப்பு அராவால் மேற்கொள்ளப் பட்டது..விருந்து இனிதே துவங்க,
காணாமல் போனார் சிலர் அவர் வேறு யாரும் அல்ல பபிதா அக்காவும் கவிதா அக்காவும் தான், இவர்களை காணவில்லை என குழப்பம் அடைந்த சிவா அண்ணா, தேடிய போது இருவரும் facebook  இல் போடுவதற்காக போட்டோகளை எடுத்து தள்ளி கொண்டு இருந்தனர்
இவர்களுடன் இணைந்த சிவா அண்ணா தானும் ஒரு சில படங்களை எடுத்தார்..ஏற்கனவே நத்தார் தொப்பியுடன் போட்டு பிரபலமான சிவா அண்ணா பொங்கல் படம் ஒன்றை எடுக்க அன்று முயற்சி செய்தார்.
சாப்பிட்டு முடிந்த கையோடு பெண்களை வீடுகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இடம் பெற்றது இதற்கு மது தலைமை தாங்கினார் மதுவுடன் குமரேஷ் மற்றும் அரா ஆகியோர் இணைந்து கொண்டனர்..கொட்டஹெனா பெண்களை முதலில் மது ஒரு வானில் ஏற்றினான் அந்த வானில் நான் போயிடு வர ஆசைப் பட்டேன் அதற்குள் சிவச்செந்துரன் அண்ணா நான் தான் போவன் என அடம் பிடிக்க நான் ஒதுங்க்கிக் கொண்டேன்.


மிஞ்சி இருந்த பெண்களை வீடுகளுக்கு அனுபுவதற்கு மதுவும் அராவும் குழம்பிக் கொண்டு இருக்க இடையில் வந்த சிவா அண்ணா தான் வெள்ளவத்த பெண்களுக்கு பாதுகாப்பாக செல்வதற்கு முன் பதிவு செய்வதாக கூறினார்..ஒருமாதிரியாக எலோரையும் பாசல் கட்டிய பின்னர் மது ஓய்வுக்கு வந்தான்..

hall manager கிழவன் தனக்கு சாப்பாடு தரவில்லை என்று அராவை கூப்பிட்டு கெட்ட வார்த்தயில் திட்ட, அரா சிரித்துக்கொண்டு நின்றான் இங்கு வந்த கோபி, எவளவு திட்டினாலும் வாங்கிறியே நீ ரொம்ப நல்லவன்டா  என்றான்..
இதன் பின் கோபியை யாரோ ஆடத் தெரியாதவன் என்று கூற, கடுப்பான கோபி விடாமல் இரண்டுமணி நேரம் ஒரு கலக்கல் நடனம் ஆடி முடித்தான்...

நீண்ட நேர கொண்டாட்டத்தின் பின் இனிதே நிறைவு பெற்றது அன்பின் ஆவாகனம். சிறப்பாக ஒழுங்கு செய்த அனைவர்க்கும் நன்றி.


பின்னூட்டல்