12/15/2009

விசித்திர வினோத்துக்கு இன்று பிறந்த நாள்..

மகேஸ்வரன் வினோத் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம். இந்த நல்ல நாளில் யார் இந்த வினோத் இவன் பின்னணி என்ன?நான் இவனை முதல் முதலாக 09/10/2006 அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன் சும்மா சொல்ல கூடாது மெல்லிய பெடியன் எண்டாலும் அட்டகாசமான ஸ்டைல், தலைக்கு ஜெல் வைத்து ஒரு விதமாக தான் நின்றான்,நானும் இவனோட கதைப்பம் எண்டு பல முறை try பண்ணியும் முதலாவது நாள் கதைக்க முடியேல..பிறகு உறவு பாலத்தில் தண்ட திறமையால அக்கா மாரின் விருப்பத்துக்குரிய தம்பியா மாறினான். வீனா போனவன் ஓவரு நாளும் சரியாய் காலைல உறவு பாலத்துக்கு வந்திருவான் இப்படி காலங்கள் போக charted ல அத்திவாரம் எண்டு தொடங்கினவன் மள மள எண்டு F1 வரையும் போய் சாதனை படைத்தான் எங்கட Batch  ல முதலாவது வேலைக்கு போனது இவன்தான்...படிப்பில் கொடி கட்டி பறந்த இவன் கடலை போடுவதிலும் குறைந்தவன் அல்ல, சில  சிங்கள பெட்டைகளுக்கு இவன் போட்ட கடலைகள் பிடித்து போய் அனே வினோத், அனே வினோத் எண்டு இவனோட கொஞ்ச காலம் திரிய அதுகளுக்கும் லவ் SET ஆக இவனுக்கு கடலை போட பெரிதா விருப்பம் இல்லாமல் போனது....Hindu union ல சேர்ந்து  பாடுபட்டு உழைத்தது இவனது பெரிய சாதனை, அணைத்து கலை நிகழ்ச்சிகளிலும் இவனது பெரும் பங்கு இருந்து வந்தது..இடையில் ஓரிரு தடவை நடனங்கள் வேறு ஆடி ஒரு மாபெரும் கொடுமை செய்தான். நான் போடும் மொக்கை நாடகங்களுக்கு பக்க பலமாக நின்று உழைப்பான் அதுகளுக்கு Animation  வேற செய்து வருவான்..எங்கட Batch IT king இவன்தான் பல நல்ல குணங்கள் இருந்தாலும் பஸ் ல ஏறினா ஒரு 10 ரூபாய குடுத்து தனக்கு மட்டும் டிக்கெட் எடுப்பான்.5 ரூபாய் ஜெல் பக்கெட் வாங்கி அதை 10 நாள் use பண்ற  technique இவண்ட தான் படிகொனும். பெரிய கொடுமை இவன் 50rs reload  பண்ணி 2மாதம் phone பாவிப்பான், Dialog sim use பண்ணி ஒரு வருசத்தில வெறும் 5 star points எடுத்த ஒரே ஆள் இவன்தான் ,உடுப்பு எடுக்க போனா சும்மாவாவது ஒரு பத்து கடை ஏறி இறங்குவான்...இவனை கஞ்சன் எண்டு ஒதுக்கி விட முடியாது, இன்று நான் இவளவு அழகா Guitar வாசிக்கிறன் அதுக்கு காரணம், வினோத் எனக்கு தந்த Guitar தான். இவனுக்கு பிடிக்காதது தமிழன் வைக்கும் மீசை, பிடித்தது செட்டிநாட்டு தோசை.வெள்ளிகிழமைகளில் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் வெளியில் கழட்டி விட்டு வந்த செருப்பு துலைய கூடாது எண்டு கும்பிடுவான்.பஸ் காசை சேமிக்க கோவில்ல இருந்து வீடு வரை நடந்து போவான்.எப்படியோ யாருக்கும் சொல்லாமல் ரகசியமா பல plan கள் போடுவான்...மொத்தத்தில் வினோத், மகேஸ்வரனால் இந்த உலகத்துக்கு தரப்பட்ட ஒரு அரிய சொத்து. அவனது சாதனைகள் தொடர  வாழ்த்துக்கள்...அழகான பெண்கள் அவனை தொடர்பு கொள்ளலாம், மச்சான் FREE யா தான் இருக்கார்.வினோத் யாருக்கும் தெரியாமல் இந்தியாவில் தனது பிறந்த நாளை  கொண்டாடிக்கொண்டு  இருபதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன...இதுவும் அவர்ட ஒரு சிறப்பம்சம் .



7 comments:

Unknown said...

கலக்கிட்டீங்க தம்பி ரஜீவ்.... வாழ்த்துக்களை சுமந்து வரும் sms ku reply பண்ணினா காசு போயிடும் எண்டே வினோத் தம்பி போன் i off பண்ணி வச்சிட்டு இருக்கார் போல...anyways
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

Unknown said...

கலக்கிட்டீங்க தம்பி ரஜீவ்.... வாழ்த்துக்களை சுமந்து வரும் sms ku reply பண்ணினா காசு போயிடும் எண்டே வினோத் தம்பி போன் i off பண்ணி வச்சிட்டு இருக்கார் போல...anyways
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

ரஜீவ் said...

நன்றி நன்றி

mathu said...

சபாஷ் ரஜீவ் அண்ணா, அத்தோட வினோத் அண்ணா வின் சிறப்பியல்புகளில் குறிப்பிட்டு சொல்ல கூடியது , அவர் ஒரு சைவப்பழம், அத்துடன் ஒரு சிறந்த தமிழ் பற்றாளர்..... அவரை பல்லாண்டு காலம் சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

ரஜீவ் said...

மது, வினோத் மொத்தத்தில் ஒரு விளங்க முடியாத கவிதை.....எப்போதும் என் நல்ல நண்பன்....பின்னூட்டளுக்கு நன்றி

Vinoth said...

@ Rajeev - Aha! Romba nanri Mr.Rajkumar Rajeevkanth avargale!
Naan konjam busyaa irunthathaala reply panna late aaheetu!
Romba nalla velai seithirukireer!
Umala Blog elutha encourege pannina ennai solla venum!!!!!!!!!
@ Mathu - Ya mathu, Endai kolgaigalil onraana athai avan mis paneetaan! Thankz nee mention pniinathuku! illaati naane eluthalaam endu irunthan!
@ Kavi - MAy be naan Sri Lanka vila irunthaalum intha murai off panni thaan vaikalaam endu irunthan!

ரஜீவ் said...

வினோத்- அதிகளவான பின்னூட்டங்கள் கிடைத்த பதிவு இதுதான், யாரையாவது போட்டு தாக்கினால் எல்லாருக்கும் பிடிக்குது...phone பண்ணி வாழ்த்து சொன்னவங்களும் இருக்காங்க..நன்றி வினோத்...பாகம் 2 வெகு விரைவில்

பின்னூட்டல்