9/28/2009

154 பஸ்சில் இசரா...... விசரா......

வெள்ளவத்தை மார்கெட்டுக்கு முன்னால இருக்கிற பஸ் ஹோல்ட் ல நான் 154 பஸ் எடுக்க காத்து கொண்டு இருந்தன், எங்கட campus கு ரெண்டு நாசமாப்போன பஸ் தான் போகும் அதில ஒன்று 155,இதில ஏறுற என்டா பாய் தலாணி எல்லாம் கொண்டு தான் போக வேணும். lecture தொடங்கிற ஒரு 15 நிமசத்துக்கு முதல்ல பல்லை ஒருக்கா
தேச்சு துப்பிட்டு பஸ்ஸ பிடிக்க ஓடி வருவன். அதே போல தான் ஒரு நாள்.. அந்த சம்பவம் நடந்தது.
அண்டைக்கு கொஞ்சம் வழமைக்கு மாறாக ஒரு ஊரே அந்த bus சுக்கு உள்ள நசுங்கி கொண்டு வந்தது வழமையா எல்லா கபோதிகளையும் உள்ளுக்குள்ள அனுப்பிட்டு, நான் படில நின்று காத்து வாங்கிட்டு வருவன்.இந்த வீனா போன கண்டக்டர் இசரா இசரா எண்டு காத்து கிழிய கத்தினான், நானும் போடா விசரா எண்டு நின்றன்.அவன் விடுற மாதிரி இல்ல, எப்பிடியாவது என்னை அந்த கூட்டத்துகுள்ள அனுப்பி பிரித்து எடுப்பம் எண்டு முடிவு எடுத்திட்டான்.நாய துரத்திற மாதிரி என்னை நடுவுகுள்ள அனுப்பிட்டான். அந்த கட்டைல போறவனுக்கு எல்லா கெட்ட வார்த்தைளையும் திட்டிட்டு, 30 நிமிச பயணத்த எப்படி கடத்தலாம் எண்டு நினச்ச படி அக்கம் பக்கம் பாத்தா, எல்லா figure ம் 20 marks கு குறைவா தான் இருந்துது எனக்கு ஏழரை சனி எண்டது சரிதான்.
சரி ஆபத்துக்கு பாவம் இல்ல, 20 marks figure ல ரெண்டை select பண்ணி எப்படி 40 marks கு improve பண்றது எண்டு ஒரு விஞ்ஞானி range ல சிந்தனை போய்கொண்டு இருக்க.இந்த விஞ்ஞான சிந்தனைக்கு இடைல உச்சக்கட்ட வியர்வைல பூசி வந்த cream எல்லாம் கரைந்து ஊத்துப்பட தொடங்கிட்டு, இந்த gapல ஒரு எரும மாடு என்னை உரசிர மாதிரியே ஒரு பீலிங்கு.... திரும்பினா பண்ணிகுட்டிகு பௌடர் அடிச்ச மாதிரி ஒருவன் பாத்தா கிட்னி திருடுறவன் மாதிரியே இருந்தான்.இது என்னடா புது வம்பா போச்சு எண்டு நினச்சிட்டு "ஆஹா அவனா நீ" என்ட வடிவேல் ட dialog க சொல்லிட்டு ஒரு step முன்னால move பண்ணினன்.அந்த டைம் பம்பலபிட்டி junction ல ஒரு கொடுமை..... இந்த ஊர் திருவிழா நேரம் பொங்கல் வாங்க அடிபடுற கூட்டம் மாதிரி ஒரு கூட்டம், எப்படியோ இடமே இல்லாத bus ல ஏறிட்டு என்ட கால எவனோ ஒரு மாடு ஏறி மிதிக்க, எவளவு நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....என்னை சுத்தி வர தலையும் கையும் தான் தெரிது ஒரு குத்து மதிப்பா நான் நிக்கிறன். அதுக்குள்ள இந்த கண்டக்டர் விசரன் ஜன்னல்ல தொங்கி வந்து campus மல்லி தவ இசற யண்ட எண்டான்...கடுப்பு உச்சத்துக்கு ஏறிட்டு,கால கஷ்டம் என்னை சுத்தி ஒரு குளிக்காத group நிக்கிற மாதிரியே ஒரு கம கம எண்ட நாற்றம் சரி கொஞ்ச நேரம் தானே எண்டு நானும் பொறுமையா இருந்தன்.
பஸ் ல நின்ற படி என்னால ரோட்ட பாக்கவே முடியேல பஸ் கொஞ்சம் வேகமா போகுது எப்படியும் campus பயிண்ட எண்டு சொல்லுவான் தானே எண்டு காத்து கொண்டு இருந்தன், திடீர் எண்டு town hall பயிண்ட எண்டு அவன் சொல்ல, நானும் இங்க பார் இந்த வெங்காயம் campus ச town hall எண்டு சொல்லுது எண்டு நினச்ச படி துரித கதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் செய்து அந்த பாதுகாப்பு அரண்களை துளைத்துக்கொண்டு வெளிய வந்து சேர்ந்தன்.யாரோ campus இருந்த இடத்தில town hall ல வச்சிருகாங்க எண்டு மனம் ஜோசிக்க. கண்டக்டர் என்னை பார்த்து நீ campus எண்டு ticket எடுத்திட்டு town hall ல இறங்கிரியா? எண்டு என்னை பல figure கு முன்னால திட்டி விட்டு மேலும் நான்குரூபாவை பறித்து சென்றான். எண்ட shirt button ஒன்றையும் காணேல பிதா மகன் விக்கரம் மாதிரி ஆகீடன் ஒரு பத்து பேர் சேர்ந்து பந்தாடினமாதிரி ஒரு நினைப்பு.
இவளவு இழப்புக்கு பிறகும் 100rs குடுத்து auto ல campus போய் சேர்ந்தன்...

5 comments:

vaseeharan said...

////வியர்வைல பூசி வந்த cream எல்லாம் கரைந்து ஊதுப்பட தொடங்கிட்டு/////

பக்கத்தில நிண்ட 20marks figure உனக்கு என்ன மார்க்ஸ் போடிச்சோ..........

Unknown said...

மச்சான் வடிவேல் ரேஞ்சுக்கு ஆகிட்டாங்க உன்ன !

கவலைப்படாத இதால்லாம் அரசியல்ல சகஜமப்பா !
வாழ்த்துக்கள் புதிய ப்லொக்கிற்கு !

ரஜீவ் said...

நண்பர்களே நன்றி பட்டவைகளை பகிர்ந்து கொண்டேன்.வருகைக்கு நன்றி மீண்டும் வருக..

Maran said...

நல்ல ஆரம்பம் நண்பா......!
எழுதுவதெல்லாம் உண்மையாக இருக்க உன் மனச்சாட்சியை வேண்டுகின்றேன்.!!
எமது ஆதரவு என்றும் உனக்காக....!

Siva said...

Good one...I have also experienced this and you know I get the bus from Angulana where 154 bus leaves and during my one hour travel I too have had enough experiences...

பின்னூட்டல்