9/28/2009

காதல் பிறந்த கதை

சூரியன் கடலுடன் காதல் கொள்ளும் அந்தி சாயும் பொழுதில், அந்த வழியில் பிரம்மன் வடித்த கால் முளைத்த கவிதையை கண்டு பிரம்மித்த விழிகளுடன் கோபுரங்கள் இல்லாமல் காதல் அலை வரிசை அவள் கண்களில் ததும்பி அவன் இதயத்தில் இடியென இறங்கிய அந்த கணம், அவன் விழிகளில் காதல் கருததரித்தது. சேர்ந்திருந்த உதடுகள் சேராமல் அவளிடம் ஆசை வார்த்தைகள் கூற ஆயத்தமானது, மங்கையின் விசித்திர பார்வை அவன் கண்களில் விழுந்து மூளை அணுக்களை துளைத்த நிலையில், சுற்றிய  நினைவுகள் பற்றிய உறவுகள் நினைவிழந்த நிலையில். அவளின் உதடுகள் பிரிந்து புதிதாய் பூத்த புது மலராய் சிந்திய புன்னகையில் சிதறிய நினைவுகளுடன் ஒரு அடி உயரத்தில் பறந்த அவன் சிட்டுக்குருவிகளும் பட்டாம் பூச்சிகளும் அவன் பாலைவன வாழ்வின் வசந்த வருகைகள் ஆக..ஆயிரம் பேர் நடமாடும் இடத்தில் அவள் தவிர ஏதும் தெரியா நிலையில் தன் நினைவுகளை தொலைத்த அவன்.அவனையே தேடி அவளின் பின்னால் தன் இதயம் சென்ற அந்த கணம் தன் காதல் பிறந்ததை உணர்ந்தான்.

No comments:

பின்னூட்டல்